உதயசூரியனில் போட்டியிட்டதால் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை- துரை வைகோ பேட்டி
1 min read
Could not support Thaweka government because of contesting in Udayasooriyan – Durai Vaiko
1.6.2026
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சியில் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயக்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக எம்.பி துரை வைகோ,”நாங்கள் துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்” என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
உதயசூரியனில் போட்டியிட்டதால் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து 27-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாது.
இவ்வாறு அவர கூறினார்.