June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சொக்கம்பட்டியில் திருட சென்ற கடைக்கு தீ வைத்தவன் கைது

1 min read

Man arrested for setting fire to shop he was trying to rob in Sokkampatti

1.6.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே திருடச் சென்ற கடையில் பணம் குறைவாக இருந்ததால் கடைக்கு தீ வைத்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் அருகே சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அரு கில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பலசரக்குக் கடை உள்ளது

இந்தக் கடையை சொக்கம் பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் கண்ணன் என்பவர் நடத்தி வருகிறார். அவர் நேற்று இரவில் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை அருகி லுள்ள டீக்கடைக்காரர் டீக்க டையை திறக்க வந்தபோது கண்ணனுடைய பலசரக்குக் கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில் கடையின் உரிமையாளர் கண்ணன் விரைந்து வந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.’

இருப்பினும் கடைக்குள் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பி லான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சியில், நேற்று அதி காலை சுமார் 2.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கண்ணனின் கடைக்குள் புகுந்தது தெரிய
வந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் கடைய நல்லூர் அருகே மேல கடைய நல்லூர் பண்பொழி சாலைப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் லெட்சுமணன் (வயது 31) என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சொக் கம்பட்டி இன்ஸ்பெக்டர் மது விக்ரம் தலைமையிலான போலீசார் லெட்சுமணனை இன்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நேற்று அதிகாலையில் கண்ண னின் கடைக்குள் லெட்சும ணன் புகுந்தார். ஆனால் அங்கிருந்த கல்லா பெட்டியில் ரூ.1,500 மட் டுமே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த
லெட் சுமணன், அந்த கடைக்கு தீ வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது.
திருடிய நபர் அந்தக் கடைக்கு தீ வைத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கைது செய்யப்பட்ட லெட்சுமணன் மீது சேர்ந்தமரம், கடைய நல்லூர், சொக்கம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங் களில் 5-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

இவர் ஒவ்வொரு பகுதிகளிலும் வீடு அல்லது கடைகளில் திருடச் செல்கின்றபோது பணம் இல்லை என்றால் அங்கு தீ வைத்து விட்டு செல்வது இவரின் வழக்கமாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *