தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District People’s Grievance Redressal Day Meeting
1.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (0106.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் 369 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய்.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர் களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதாஹனீப், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வெங்கடலெட்சுமி தனித்துணை ஆட்சியர் (ச.பாதி) (பொ) பால்துரை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.