புதிய அரசியல் கட்சி 2 நாளில் பதில் அளிக்கிறார் அண்ணாமலை
1 min read
New political party Annamalai to respond in 2 days
1.6.2026
தமிழக அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அண்ணாமலை டெல்லி பயணம் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தநிலையில், டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது,
புதிய அரசியல் கட்சி தொடக்கமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அதில் 2 நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன் என பதில் அளித்து விட்டு திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
பாஜகவுடன் சமரசமா, தனிக்கட்சியா என 2 நாட்களில் முடிவெடுக்கிறார் அண்ணாமலை.
நாளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலையின் அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.