அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் 3 பேர் ராஜினாமா?
1 min read
Will 3 more AIADMK MLAs resign?
1.6.2026
அதிமுகவில் தொடர்ந்து நடைபெற்று வரும். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், மேலும் சிலர் விரைவில் அதே முடிவை எடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளதுடன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகலாம்?
ஏற்கனவே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், வரும் வாரத்தில் மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியைத் துறக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்பதால், கட்சி தலைமையகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்களின் தொடர்ச்சியான ராஜினாமா காரணமாக, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 47-லிருந்து 43 ஆகக் குறைந்துள்ளது இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுடன் கட்சி தலைமை ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தக்கவைக்கும் நடவடிக்கைகளிலும் தலைமை கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே, அதிமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் அவசர புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பண பலத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் தொடர் அரசியல் நகர்வுகள் காரணமாக, மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட தரப்புகள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்களை வெளியிடுமா என்பது அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.