August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் ஓடும் ரெயிலில் பெண் மயங்கி விழுந்து சாவு

1 min read


Woman faints and dies after falling on a moving train in Nellai

1.6.2026
மதுரையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட ரெயில் இரவு 9.45 மணிக்கு நெல்லை வந்தது.
அப்போது ரெயிலில் பயணம் செய்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் கீழ்த்தாரை நடுத்தெருவை சேர்ந்த மணிராஜ் மனைவி தவமுத்து (வயது 65) என்பது தெரியவந்தது. அவரின் மகன் கார்த்திக் மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *