கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் புஷ்ப யாக பூஜை
1 min read
Pushpa Yagya Pooja at Keelappavur Krishna Temple
.
1.6.2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலில் புஷ்ப யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி (கிருஷ்ணன்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புஷ்ப யாக பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்பஜெபம், புருஷசுத்தம், மூலமந்திர ஜெபம், எல்லா திரவியங்களால் அபிசேகம், திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலையில் புஷ்ப யாகம் பூஜை தொடங்கியது, தொடர்ந்து வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், 12 வகையான பூக்களால் 12 முறை யாகம் நடைபெற்று 12 முறை தீபாராதனையும், தொடர்ந்து புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.