கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு பணிகள் – ஆட்சியர் ஆய்வு
1 min read
Karivalamvantanallur Excavation Works – District Collector Inspection
2.6.2026
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் கரிவலம்வந்தநல்லூர்
அகழாய்வுத் தளத்தில் இன்று (02.06.2026)மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தொல்லியல்துறையின் மூலம் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வுத் தளத்தில், காரிச்சாத்தான் ஊராட்சிக்குட்பட்ட காரிச்சாத்தான் மலையடிவாரப் பகுதியில் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள தொல்லியல் மேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள், பண்டைய வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுகள் தொடர்பான அரிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.
அதனடிப்படையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களிலும் மணல் நிரப்பப்பட்டு சீர் அமைத்திட்ட விபரங்கள் குறித்து பார்வையிட்டும். வரும் காலங்களில் நீச்சல் குளம் அமைத்திடுதல் மற்றும் கேலரி மேற்கூரை அமைத்திடுவதற் கான வழிவகை பற்றிய விவரங்கள் குறித்து கேட்டறிந்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு பொறுப்பாளர் (ம) தொல்லியல் அலுவலர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ராஜேஷ்,
திருவேங்கடம் வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.