June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே கல் குவாரியில் விபத்து; இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி

1 min read

Accident at a stone quarry near Alankulam; Machine operator dies tragically

2.6.2028
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் இன்று ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த குவாரியில் கல் உடைக்கும் பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பாறை ஒன்று சரிந்து இயந்திரத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இயந்திரத்திற்குள் இருந்து பணிபுரிந்த கீழப்பாப்பாக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் இசக்கிராஜா (வயது 23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹிட்டாச்சி ஆபரேட்டராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த கீழ பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த இசக்கிராஜா குடும்பத்தினருக்கு அந்த கல்குவாரி யின் உரிமையாளர் கே. ஆர். ராஜூ ரூ. 27 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *