June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு

1 min read

Meenakshi Natarajan’s nomination paper rejected in Madhya Pradesh Rajya Sabha election.

10.6.2026
மாநிலங்​களவை​யில் காலி​யாக உள்ள 27 இடங்​களுக்கு வரும் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் மத்​திய பிரதேசத்​தில் 3 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது.

230 உறுப்​பினர்​ கொண்ட மாநில ​பேர​வை​யில் ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 58 வாக்​கு​கள் தேவை. பாஜக​விடம் 164, காங்​கிரசிடம் 64 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இதனால் பாஜக 2, காங்​கிரஸ் ஓரிடத்தில் எளி​தாக வெல்ல முடி​யும். பாஜக பொதுச் ​செய​லா​ளர் தருண் சக், மாநிலசெய​லா​ளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாள​ர்களாக உள்​ளனர். பாஜக​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3-வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்​கப்​பட்டார்.
காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐத​ரா​பாத் நீதி​மன்​றத்​தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்​பு மனு நிராகரிக்​கப்​பட்​டது. எனவே, பாஜக​வின் 3 வேட்​பாளர்​களும் போட்​டி​யின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *