நாடு கடத்தப்பட்ட வங்கதேச தம்பதி மீண்டும் மும்பையில் சிக்கினர்
1 min read
Deported Bangladeshi couple caught again in Mumbai.
11.6.2026
கடந்தாண்டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட வங்கதேச தம்பதியினர் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மும்பையின் தாதர் பகுதியில், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த லிட்டன் ஷாஹித் முல்லா (43) மற்றும் பாபி பேகம் (37) ஆகிய வங்கதேச தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர்கள், மீண்டும் சட்டவிரோதமாக ஊடுருவி மும்பையில் பதுங்கியிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுடைய மொபைல் போன் மற்றும் வங்கதேச அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போதும் இந்தியாவில் தங்குவதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால்தான் அவர்களை அதிகாரிகள் நாடு கடத்தினர். தற்போது மீண்டும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு கடத்தப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமான காட்டு எல்லைப் பாதை வழியாக இந்தியாவுக்குள் மீண்டும் நுழைந்து ஏற்கனவே வசித்த இடத்திற்கு மீண்டும் குடிபெயர்ந்தோம் என வங்கதேச தம்பதி போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.