June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கைகள் விவரம்

1 min read

Details of the requests made by Chief Minister Vijay at the NITI Aayog meeting.

11/6/2026
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான நிடி ஆயோக் கூட்டம், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. மாநிலங்களின் நிதித் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு:

  • திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. மருத்துவ இடங்களை 12ம் வகுப்பு மதிப்பெண் படி நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி தர வேண்டும்.
  • ரூ.3284 கோடி கல்வி நிதி விடுவிக்க வேண்டும். * கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும்.
  • மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த விழைகிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *