தென்காசி மாவட்ட பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டம்
1 min read
Tenkasi District BJP Consultative Meeting
13.6.2026
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுரண்டை கோதை மஹாலில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் தென்காசி கூட்டத்திற்கு, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர்கள்பாலகுருநாதன்அருள்செல்வன்,பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.காந்தி, பத்திரிகை யாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கமளித்தார்.
முன்னதாக நடைபெற்ற மாநில, மாவட்ட, அணி, பிரிவு மற்றும் மண்டலத் தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதன்படி, வரும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, ஊராட்சி மற்றும் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், 20.06.2026 முதல் 07.07.2026 வரை நடைபெறவுள்ள பாஜக கட்சியின் பயிற்சி முகாம்களில் அதிகளவில் பங்கேற்று சிறப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், எஸ்.வி.அன்புராஜ், ராமராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன், தென்காசி எஸ்.முத்துக்குமார், தர்மர், புலிக்குட்டி, மாவட்டச் செயலாளர்கள் மகாலட்சுமி, அருணாச்சலம், திலகர், முப்புடாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பாஜக ஒன்றியத் தலைவர்கள் வைகுண்ட ராஜா, முருகன், சந்திரசுப்ரமணியன், இசக்கிமுத்து, சரவணன், வேல்முருகையா, தட்சிணாமூர்த்தி, மகேஸ்வரி, கணேசன், சிவா, பரமசிவன், குட்டிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர்கள் மகேஸ்வரி, பரமேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் பச்சைக்கிளி, மாநில செயற்குழு உறுப்பினர் உமா முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் விவேக்குமார், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர், ஊடகப் பிரிவு பொறுப்பாளர் செந்தூர் பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் கருப்பசாமி, தொண்டு நிறுவனப் பிரிவு மாவட்ட தலைவர் மாரி, தொழில் பிரிவு
மாவட்ட தலைவர் சங்கிலி பாண்டியன், முன்னாள் ராணுவத்தினர் அணி பிரிவு தலைவர் ராமச்சந்திரன், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வீரபத்திரன், மருத்துவப் பிரிவு மாநில செயலாளர் உத்தமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.