என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து த.மா.கா. விலகல்
1 min read
TMC withdraws from the NDA alliance
14.6.2026
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா.வும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகும் முடிவை த.மா.கா. எடுத்துள்ளது.
இதுபற்றி ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் எங்களுடைய கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆனபோதும் இலக்கை அடைய முடியவில்லை.
நாங்கள் தேர்தலின்போது, என்.டி.ஏ. கூட்டணியில்தான் பணியாற்றினோம். கூட்டணியில்தான் தோல்வியடைந்தோம்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியுள்ளது. எனினும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு நட்பு சக்தியாக செயல்படுவோம். என்.டி.ஏ. கூட்டணியில் நட்பு சக்தியாக தொடரும். எங்களுடன் கூட்டணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாற அவர் கூறினார்.