June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

முறைகேடாக நியமனம்: 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம்

1 min read

Irregular Appointment: 54 Junior Assistants Dismissed

19.6.2026
கோவை மாநகராட்சியில், அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள் 54 பேரை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில், எஸ்பி வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது ,2021ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் 69இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. 654 பேர் விண்ணப்பித்த நிலையில் 440 பேர் நேர்முக தேர்வு மற்றும் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். 54 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சியில் 2016ம் ஆண்டு கருணை அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்த தனி நீதிபதி, தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் பணி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர உரிமையில்லை என உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதில், ” உரிய தகுதி இருந்தும் முறையாக விளம்பரம் செய்யாததாலும் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. உரிய விதிமுறைகள் மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலும் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டனர். இதனை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், செந்தில்குமார் அமர்வு தீர்ப்பில்கூறியதாவது:-

தேர்வாணையம் அல்லது தேர்வு நடைமுறைகள் பின்பற்றாமல் 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புறவாசல் வழியாக இந்த நியமனம் நடந்துள்ளது. இந்த நியமனம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான

தேர்வாணையம் அல்லது தேர்வு நடைமுறைகள் பின்பற்றாப்பாமட்ல 54 பேர் பயி நிமயம் செய்யப்பட்டனர்.புறவாசல்வழியாக வழியாக இந்த நியமன் நடைபெற்றதாக கூறி ரத்துஉடந்தையாக இருந்த அதிகரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி பணியிடங்களில் தகுதியான நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *