June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி உள்பட பல கோவில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து

1 min read

Construction work for wedding halls and commercial complexes using temple funds—including in Tenkasi—has been cancelled.

19.6.2026
கோயில் நிதியில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவில் உபரி நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

இதை ஏற்று கோவில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகம் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. சட்டமன்ற அறிவிப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றன.

தஞ்சாவூர் நாகநாதசுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம்
தென்காசி சங்கரநாராயண சுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம்
திருச்சி சந்திரமவுலீஸ்வரர் கோவில் சார்பில் திருமண மண்டபம்
பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயில் சார்பில் திருமண மண்டபம்
ஒட்டன்சத்திரம், வரதராஜபெருமாள்கோயில் சார்பில் திருமண மண்டபம்
தேனி கம்பராய பெருமாள் கோயில் சார்பில் திருமண மண்டபம்
திருவள்ளூர் சுப்பிரமணியசுவுாமிகோயில் சார்பில் திருமண மண்டபம்
தென்காசி இலஞ்சிகுமாரர் கோயில் சார்பில் திருமண மண்டபம்
விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவில் சார்பில் திருமண மண்டபம்
புதுக்கோட்டை விட்டோபா கோயில் சார்பில் திருமண மண்டபம்
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் சார்பில் திருமண மண்டபம்

மயிலாடுதுறை, சுவேதாரண்யேசுவர சுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம்
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோயில் சார்பில் திருமண மண்டபம்

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலின் உபகோயிலான சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கோயில் சார்பில் திருமண மண்டபம்

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயில் சார்பில் திருமண மண்டபம்

சென்னை மேற்கு மாம்பழம் பாஷ்யகார ஆதிசென்னகேசவ பெருமாள் கோயில் சார்பில் வணிக வளாகம்

திருநெல்வேலி மாவட்டம் காந்தியம்மன் கோயில் சார்பில் வணிக வளாகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் வணிக வளாகம்

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோயில் சார்பில் வணிக வளாகம்

செங்கல்பட்டு நந்தீஸ்வரர் கோயில் சார்பில் வணிக வளாகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சார்பில் வணிக வளாகம்

சிவகங்கை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் சார்பில் திருமணம்.

உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகளின் அரசாணைகளை ரத்து செய்ய அறநிலையத்துறை கமிஷனர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த பரிந்துரையை ஏற்று கோவில் உபரி நிதியில் இருந்து கட்டுமான பணிகளை துவங்கப்படாத நிலையில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு வழங்கப்பட்ட அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.

புதிய திட்டங்கள்

நீதிமன்ற உத்தரவு மற்றும் கோயில்களின் நிதிச்சுமை காரணமாக ரூ.245.85 கோடி மதிப்பில் 29 திருமண மண்பங்கள் ( ரூ.115.77 கோடி) மற்றும் 17 வணிக வளாகம் ( ரூ. 130.8 கோடி) கட்டும் பணி என 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியைக் கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *