பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்
1 min read
Pahalgam attack: Sensational details in NIA charge sheet
22.6.2026
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல் லப்பட்டனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது பற்றிய முக்கிய அம்சங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன. அவை வருமாறு:-
எல்லை தாண்டி வந்த டிரோன்கள் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் வரை உள்ள உட்பகுதிகளில், யாருடைய கண்ணிலும் படாமல் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வெற்றிகரமாக இறக்கியுள்ளன.
பலத்த பாதுகாப்பு கொண்ட கட்டுப்பாட்டு கோடு பகுதிகளை மட்டுமே நம்பியிருப்பதற்குப் பதிலாக, எல்லைக்கு அப்பால் உள்ள சூத்திரதாரிகள் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை நேரடியாக வழங்க, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி இந்த டிரோன்கள் உட்பகுதிக்குள் ஊடுருவின.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கோகல் தாரா காடுகள், எல்லைக்கு அப்பாலிருந்து நேரடியாகப் பார்க்கும் வகையில் அமைந்திருப்பதால், டிரோன் மூலம் பொருட்கள் இறக்கப்படும் முக்கிய இடமாக மாறியுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கும் பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே வளர்ந்து வரும் நம்பிக்கையின்மை பிர் பஞ்சால் மலைத்தொடர்களில் பாதுகாப்பைப் பேணுவதற்கு பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.