விவசாயிக்கு நெல் உற்பத்தி திறனுக்கான விருது-தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
Award for paddy productivity to farmer – Tenkasi Collector announces
23.6.2026
வேளாண்மைத் துறை மூலம் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்தில் அதிக உற்பத்தி திறன் பெரும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்படுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிக்கு பரிசாக ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப்பரிசு மற்றும் ரூ.7000/- மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும் விவசாயிக்கு சொந்தம் அல்லது குத்தகை நிலம் குறைந்தது 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தது 2500 கிலோ மகசூல் பெறப்பட்டால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகங்களில் சன்ன இரக நெல் விதைகளை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.
பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூ.150/-செலுத்தி பதிவு செய்ய வேண்டும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. விவசாயிகள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.