ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
1 min read
Schoolgirl commits suicide by hanging near Alangulam
23.6.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள
ஊத்துமலை கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தாய் தந்தையர் வீட்டு வேலை பார்க்கச் சொன்னதல் ஆத்திரமடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா சங்கரன்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று விடுமுறை என்பதால் வீட்டில் வேலை பார்க்குமாறு சரண்யாவை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.