June 23, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர்: அண்ணாமலை அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

1 min read

Keezhapavur: Membership drive for Annamalai’s organization intensifies

23/6/2026

தென்காசி மாவட்டம்,
கீழப்பாவூர் ஒன்றியத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் தலைமையை ஏற்கும் வண்ணம் வீ தி லீடர்ஸ் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையர்தவணை, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி மற்றும் மத்தளம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் இவ்வமைப்பில் இணைந்தனர். தொடர்ந்து ஒன்றிய பகுதிகள் உள்ள அனைத்து கிராமங்களிலும் இப்பணி நடைபெற்று வருவதாகவும், அண்ணாமலையில் தலைமையை ஏற்று பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் இந்த அமைப்பில் இணைந்து வருவதாக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *