தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District Public Grievance Redressal Day Meeting
23.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங். தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 705 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
முன்னதாக, தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளராக திருமதி.சு.திருப்பதி என்பவர் பணியில் இருக்கும் போது 19.04.2025 ισότ காலமான தைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரும் மகளுமான திருமதி.சு.பாரதி என்பவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
02 தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 /- மதிப்பிலான சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3.285/- மதிப்பில் ரூ.6570/- காதொலி கருவிகள் என 03 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.22320/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.