தென்காசி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
1 min read
Police Inspectors Transferred in Tenkasi District
23.6.2026
தென்காசி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் நிர்வாக வசதிக்கேற்ற வகையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு காவல் ஆய்வாளர் மதன் ராம்குமார் சுரண்டை காவல் நிலையத்திற்கும் சிவகங்கை மாவட்ட சிறப்பு பிரிவு ஆய்வாளர் சாகுல் ஹமீது ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளராகவும், ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் க.ஆடிவேல் புளியங்குடி காவல் நிலையத்திற்கும் அய்யாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் சிவகிரி காவல் நிலையத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் ஆய்வாளர் எம் ஜெயலட்சுமி கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளராகவும், பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் எம்.மீனா கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்திற்கும் அருமனை காவல் நிலைய ஆய்வாளர் பி கமலா தேவி தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கும் கன்னியாகுமரி மாவட்டம் பழுக்கல் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி அருமனை காவல் நிலையத்திற்கும் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் சண்முக லட்சுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்
மதுரை உயர்நீதிமன்ற குற்றப்பிரிவு ஆய்வாளர் சத்தியபாமா தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் புளியரை காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை மண்டல காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.