June 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்

1 min read

Review meeting of the monitoring committee on anti-drug measures and mineral resources in Tenkasi

25.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.06.2026) சட்டம் மற்றும் ஒழுங்கு. சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு. கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.அசோக்குமார், முன்னிலையில் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் தொடர்பான தரவுகள் குறித்தும். முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலைகள் குறித்தும், நடப்பு மாதத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தரவுகள் குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெற்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது குறித்தும், 10 வட்டாரங்களில் சாலை ஓரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும், தென்காசி ஆய்க்குடி சாலை இரயில்வே கடவு முன்பாக உள்ள வேகத்தடைக்கு முன்னும் பின்னும் உள்ள பள்ளங்களை சரி செய்வது குறித்தும். பல்வேறு கூட்டப்பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு, போதை தடுப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு போன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால்,மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து தனித்துணை ஆட்சியர் (ச.பாதி)(பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியர் அலுவகை மேலாளர் (குற்றவியல்) மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *