June 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ராமநதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

1 min read

Water release from Ramanathi Dam

25.6.2026
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமநதியில் இருந்து இன்று (25.06.2026) கார் பருவ சாகுபடிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி, தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமநதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனால் இராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகிய பாசன நிலங்களுக்கு 1008:19 ஏக்கர் பயன்பெறும் வகையில் கார் பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த் தேக்கத்திலிருந்து 25.06.2026 முதல் 3110.2026 வரை 129 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்குக்கு மிகாமலும், கார் பருவ காலத்தில் மொத்தம் 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி குமார், உதவி பொறியாளர் கணபதி மற்றும் அரசு அலுவர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *