June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

“இந்தியா-செஷல்ஸ் நட்பு உறுதியானது”- பிரதமர் மோடி பெருமிதம்

1 min read

“India-Seychelles friendship is steadfast” – Prime Minister Modi expresses pride.

28/6/2026
இந்தியா-செஷல்ஸ் நாடுகளுக்கு இடையேயான நட்பு மிகவும் “உறுதியானது, வலுவானது மற்றும் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடியது” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

செஷல்ஸ் நாட்டின் தேசிய தினப் பொன்விழா கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ள, பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாகச் சனிக்கிழமை அங்கு சென்றடைந்தார். அவருக்குச் செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்திற்கே வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிபர் பேட்ரிக் ஹெர்மினி அளித்த அதிகாரப்பூர்வ அரசு விருந்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையேயான நட்பு சீராகவும், வலுவாகவும் வளர்ந்துள்ளது. இந்த ஓட்டத்தில் நாம் இருவரும் இணைந்து நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சீஷெல்ஸ் செஷல்ஸ் அதிபர் ஹெர்மினி இருநாடுகளின் ஆழமான பிணைப்பை உறுதிப்படுத்தினார். “இந்தியா எப்போதும் செஷல்ஸ் நாட்டின் உண்மையான, அசைக்க முடியாத நண்பனாக இருந்து வருகிறது.

இந்திய மக்களின் இந்த பாசத்தை எங்கள் நாட்டு மக்களும், இங்கு வாழும் துடிப்பான இந்திய வம்சாவளியினரும் முழுமையாக உணர்ந்துள்ளனர்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *