June 29, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: பாலியல் பலாத்காரம் செய்து பாட்டி, பேரனை கொன்றவருக்கு வாழ்நாள் சிறை

1 min read

Tenkasi: Life imprisonment for man who raped and killed grandmother and grandson.

29/6/2026
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் 70 வயது மூதாட்டியை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓட முயற்சித்த போது தன்னை அடையாளம் கண்ட அந்த முதாட்டியின் பேரனையும் கட்டையால் அவரது தலையில் பலமாக அடித்து கொலை செய்த நபருக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.ராஜவேலு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் கடந்த 11.07.2022 அன்று பக்ரீத் திருநாள் அன்று இரவு 11 மணிக்கு மேக்கரை டேம் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் அப்துல்கனி என்பவரது மனைவி சைத்தான் பீவி ( வயது 70) என்பவர் தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வீட்டிற்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்த நபர் 70 வயதான சைத்தான் பீவியை
பாலியல் பலாத்காரம் செய்த போது அந்த மூதாட்டி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியை நிர்வாண கோலத்தில் தூக்கி கொண்டு வெளியே சென்ற போது அந்த மூதாட்டியின் பேரன் காஜீர்அலி இருட்டில் அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் யார் அது ? என்று சத்தம் போட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து காஜீர்அலியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் காஜீர்அலி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். இதை அறிந்த அந்த போதை நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மறுநாள் காலையில் முகம்மதுகனியின் மனைவி பானு அங்கு வந்து பார்த்த போது தனது கணவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும், பாட்டி நிர்வாண கோலத்தில் இறந்து கிடப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுபற்றி அச்சன்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அச்சன்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதே மேக்கரை பகுதியில் வண்ணாத்திப் பாறை ரோடு பகுதியில் வசித்து வரும் முகம்மதுகனி என்பவரின் மகன் முகம்மது காசிம் (வயது 19/2022) என்பவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது.

உடனடியாக அச்சன்புதூர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

இந்த வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி. ராஜவேலு முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி ராஜவேலு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் வேல்கனி, தலைமை காவலர் இசக்கி ஆகியோர் செயல்பட்டனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *