July 1, 2026

Seithi Saral

Tamil News Channel

அண்ணாமலை விரைவில் அமெரிக்கா இன்று பயணம்

1 min read

Annamalai to travel to the US today.

1.6.2026
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளார்.அதில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதுவரையில் 18 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இணையதளம் வழி யாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பா.ஜ.க. மட்டுமின்றி பொதுநல அமைப்புகள், தன்னார்வர்கள் சமூக நல சிந்தனை உள்ளவர்கள் அதிக அளவில் இந்த அமைப்பில் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அண்ணா மலை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை, நியூ ஜெர்சி தமிழ் பேரவை இணைந்து நடத்தும் இந்த விழாவில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். இதற்காக இன்று நள்ளிரவு அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 3 மற்றும் 4-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *