July 2, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒடிசா பாடப்புத்தகத்தில் ஐஸ்​வர்யா ராய் பாடல் இடம்பெற்றதால் சர்ச்சை

1 min read

Controversy over Aishwarya Rai song featuring in Odisha textbook

2.7.2026
ஒடிசா மாநிலத்தில் 5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒடிசா மாநிலத்​தில் அண்​மை​யில் 5-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான அரசுப் பாடப் புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன. இந்​நிலை​யில் இந்​தப் பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999-ல் வெளி​யான ஹம் தில் தே சுகே சனம் என்ற படத்​தின் பாடல் இடம்​பெற்​றுள்​ளது. இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்​கள் பயிலும் பாடப் புத்​தகத்​தில் திரைப்​படப் பாடல் அச்​சிடப்​பட்​டது எப்​படி என்று கல்​வி​யாளர்​கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

‘நிம்​புடா நிம்​பு​டா’ என்று தொடங்​கும் இந்​தப் பாடல், பாடப்​புத்​தகத்​தில் இடம்​பெற்​றது எப்​படி என்​பது புரி​யாத புதி​ராக உள்​ளது. ஏற்​கெனவே அச்​சிடப்​பட்ட தாள்​கள், பாடப்​புத்​தகத்தை தொகுக்​கும்​போது தவறு​தலாக சேர்க்​கப்​பட்டு விட்​டதா என்பது குறித்து விசா​ரணை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்​தான் மாநில நாட்​டுப்​புறப் பாடலான இது மிக​வும் பிரபல​மான பாடல். இந்த ‘நிம்​புடா நிம்​பு​டா’ பாடல் பாடப்​புத்​தகத்​தில் அப்​படியே அச்​சிடப்​பட்​டுள்​ளது.

இதனிடையே ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (எஸ்​சிஇஆர்​டி) பாடப்​புத்​தகங்​களில் 1,600-க்​கும் மேற்பட்ட பிழைகள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதையடுத்து இந்​தப் புத்தகங்​கள் தீவிர ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக 8-ம் வகுப்பு பாடப்​புத்​தகங்​களில் அதி​கபட்​ச​மாக 705 பிழைகள் உள்​ளன.

இதையடுத்து பாடப்​புத்​தகங்​கள் திருத்​தப்​பட்டு மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்​றும் மக்​கள் கல்​வித் துறை மந்திரி நித்​யானந்த கோண்ட் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக வி​சா​ரணைக் குழு அமைக்​கப்பட்​டுள்​ள​தாக ஒடிசா மாநில முதல்​-மந்திரி மோகன்​ சரண்​ மாஜி தெரி​வித்​துள்​ளார்​.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *