August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

முதுகுளத்தூரில் 7,8-ந் தேதிகளில் பட்டா தொர்பான சிறப்பு முகாம்

1 min read


Special camp regarding *patta* in Mudukulathur on the 7th and 8th.

2.7.2026
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பட்டா தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக முதுகுளத்தூர் வட்டத்தில் இம்மாதம் 7 மற்றும் 8 ம் தேதிகளில் பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு மற்றும் கணினி திருத்தம் ஆகிய பட்டா தொடர்பான சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முதுகுளத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் தலைமையில் நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பட்டா தொடர்பான கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனு செய்து உடனடியாக பயன்பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *