July 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடி

1 min read


First prize of Rs 30 crore in Kerala Onam Bumper Lottery.

9.7.2026

கேரளத்தில் வாரத்தில் 7 நாட்களும் முதல் பரிசு ரூ. 1 கோடி மதிப்பிலான லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

இவை தவிர பண்டிகையொட்டி பம்பர் லாட்டரி விற்பனையும் அங்கு பிரபலம். அந்த வகையில் ஓணத்தையொட்டி நடத்தப்படும் முதல் பரிசு ரூ.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு முதல் அந்த தொகை ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள லாட்டரி துறை இயக்குனர் அஞ்சு கூறுகையில், நடப்பு ஓணத்தையொட்டி முதல் பரிசு ரூ.30 கோடிக்கான பம்பர் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

இதற்கான விற்பனையை வருகிற 17-ந் தேதி முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார். குலுக்கல் செப்டம்பர் 26-ந் தேதி நடக்கிறது.

மொத்தம் 10 சீரியல்களில் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். மொத்தம் ரூ.125 கோடியே 54 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் முதல் பரிசு ரூ.30 கோடி, 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.25 லட்சம் வீதம் 20 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.5 லட்சம் வீதம் 10 பேருக்கும், 5-ம் பரிசு ரூ.2 லட்சம் வீதம் 10 பேருக்கும், 6-வது பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் 54 ஆயிரம் பேருக்கும், 7-வது பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 81 ஆயிரம் பேருக்கும், 8-வது பரிசு ரூ.1,000 வீதம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேருக்கும், 9-வது பரிசு ரூ.500 வீதம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 400 பேருக்கும் வழங்கப்படுகிறது என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *