நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் காங். கோஷ்டி மோதல்
1 min read
Clash between Congress factions at Kamaraj’s birthday event in Nellai.
16.7.2026
திருநெல்வேலியில் காமராஜர் பிறந்தநாள் விழாவில், காங்கிரஸ் தலைவர்கள் சங்கரபாண்டியன் மற்றும் உமாபதி சிவன் இடையே புகைப்படம் எடுக்கையில் மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பும் ஜாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்ஜஊடக பொறுப்பாளர் ஆ.கோபண்ணா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் இருவருக்கும் அனுப்பியுள்ள நோட்டீஸில்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் (15.07.2026) காலை 11.00 மணியளவில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே. சங்கரபாண்டியன் ,
உமாபதி சிவன் இருவரும் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் ஊடகங்களில் செய்தி வெளிவருகிற அளவுக்கு, கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதற்காக அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது