கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு
1 min read
Price hike of Kovilpatti Kadalai Mittai (peanut candy)
25.8.2026
புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெல்லம், நிலக்கடலை, ஏலக்காய், பேக்கிங் கவர்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தி செலவு உயர்ந்ததின் காரணமாக கடலை மிட்டாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவில்பட்டி கடலை மிட்டாய் 25 சதவீத விலை உயர்வு இன்று முதல் (25.08.2026) அமலுக்கு வந்தது.
இதன்படி ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய், தற்போது ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவைவை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையும் அதிகரித்துள்ளது.