மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் பலி
1 min read
Four people, including a school principal, killed in a militant attack in Manipur.
28.8.2026
மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மகுய் அஷாங் மற்றும் தபாம்பா நாகா கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் வியாழன் அன்று காலை 8:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தனியார் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் தட்சோங்போ ரிங்காங்மாய், சவாங்கிணிங் கிராம நிர்வாகத் தலைவர் விசோபூ சாரேனமாய், எம். விஜுனமாய், அனில் விஜுனமாய் ஆகியோர் உயிரிழந்தனர். கெய்காமங் ரிங்காங்மாய் என்பவர் காயமடைந்தார்.
பலியான 5 பேரும் ‘லியாங்மை நாகா’ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சடலங்கள் அருகில் உள்ள சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரின் நாகா சமூகத்தின் உச்ச அமைப்பான ‘ஐக்கிய நாகா பேரவை’ இந்தத் தாக்குதலுக்குக் குக்கி கிளர்ச்சி அமைப்புகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, மே 3, 2023 அன்று பழங்குடியினர் பேரணிக்குப் பிறகு வெடித்த கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு, மத்திய அரசு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து நவம்பர் 20 வரை காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மே 2023 முதல் பள்ளத்தாக்கில் வாழும் மெய்தி மற்றும் மலைப்பகுதியில் வாழும் குக்கி இனமக்களுக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தொடர் கலவரம் மற்றும் அப்போதைய முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 13 முதல் 2026 பிப்ரவரி 4 வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.