September 2, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தியவர் சிறையிலடைப்பு

1 min read

Man jailed for sexually harassing a woman near Kadayam.

2.9.2026
கடையம் அருகே உள்ள பண்டாரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரது மனைவி இலுப்பை முத்து. இவரது கணவர் கேரளாவில் கூலி பணி செய்து வருகிறார். இலுப்பை முத்து தனக்கு சொந்தமான இடத்தில் ஆடு மாடுகள் மேய்த்து விவசாயம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இலுப்பை முத்து தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த லட்சுமியூர் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் ரவி என்ற சுடலைக்குமார் இலுப்பை முத்துவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உடல் ரீதியாகவும் அவரிடம் அத்துமீறியுள்ளார். இதைக் கண்டித்த இலுப்பை முத்துவின் அப்பா சங்கரபாண்டியனையும் அடித்து மிரட்டியுள்ளார்.

இதனால் உயிர் பயத்துடன் இலுப்பை முத்து கடையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப் பதிவு செய்து ரவி என்ற சுடலைக்குமாரை இரவோடு இரவாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலடைத்தார்.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உடல் ரீதியாக காயப்படுத்திய தட்டிக்கட்ட அவரது அப்பாவை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *