September 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டியது

1 min read

Temperatures hit the century mark in six locations across Tamil Nadu today.

7/9.2026
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. அக்னி நட்சத்திர நாட்களை விட அதிகமாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-

வேலூர் – 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்)

ஈரோடு – 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)

திருச்சி – 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)

கரூர் பரமத்தி – 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)

பாளையங்கோட்டை – 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

நாமக்கல் – 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *