September 29, 2026

Seithi Saral

Tamil News Channel

ம.பி.யில் கும்பமேளாவுக்காக பழமையான மசூதியின் பகுதி இடிப்பு- தடியடி

1 min read

Part of an ancient mosque demolished for Kumbh Mela in Madhya Pradesh; lathi-charge

28.9.2026
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உஜ்ஜைனில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நேற்று காலை, மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்கான உஜ்ஜைன் மாநகராட்சியின் நடவடிக்கையை உள்ளூர் மக்கள் தடுக்க முயன்றனர்.

போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதன் விளைவாக, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர்.

அப்பகுதியில் சுமார் 2,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதியைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, 500 மீட்டர் சுற்றளவிற்குள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இரண்டு நாட்களாக இரவில் மசூதிக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மசூதியை இடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இருப்பினும், இன்று காலை அதிகாரிகள் பலவந்தமாக இடிப்புப் பணியைத் தொடங்கி, மசூதியின் பகுதியை இடித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *