September 29, 2026

Seithi Saral

Tamil News Channel

டிராவல்ஸ் அதிபரை கழுத்தை நெரித்து கொன்று கார் கடத்தல்- 3 பேர் கைது

1 min read

Travel agency owner strangled to death and car hijacked – 3 arrested

29.9.2026
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 23ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்து வந்தது . பவானிசாகர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீனிவாசா நகரைச் சேர்ந்த ரமா பிரியா (49) என்பவர் பவானிசாகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து இறந்தது தனது கணவர் ஜெயச்சந்திரன் (55) சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு இயக்கம் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார் என்றார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வாடகைக்கு செல்வதாக கூறிவிட்டு காரில் சென்றவர் இறந்துள்ளார் . அவரது கழுத்தில் காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார் .
இதனால் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெயச்சந்திரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது அதில் அவரது கழுத்து எலும்பு உடைந்தது தெரியவந்தது இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது இதையடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசன் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது .
சம்பவம் நடந்த இடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஜெயச்சந்திரன் கடைசியாக யாரிடம் போனில் பேசினார் என்ற விவரங்களை சேகரித்தனர்.அப்போது ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தன்ராஜ் (40) என்பவரிடம் ஜெயச்சந்திரன் கடைசியாக போனில் பேசியது தெரிய வந்தது இதை அடுத்து தன்ராஜை பிடித்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
.இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தன்ராஜ் கோவில்களில் உண்டியலை உடைத்து திருடியதும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் அவரது உறவினரான திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் (41), அவரது நண்பர் பாலமுருகன் (42) ஆகியோருடன் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட திட்டமிட்டு சென்றனர்.
ஆனால் உண்டியலில் பணம் இல்லாததால் உசிலம்பட்டிக்கு சென்றனர். அங்கு கார் ஸ்டாண்டில் மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வந்துள்ளனர். அந்தக் காரை ஜெயச்சந்திரன் ஓட்டி வந்துள்ளார். அப்போது பவானிசாகர் கீழ்பவானி வாய்க்கால் அருகே காரை நிறுத்த சொல்லி தன்ராஜ், ஆனந்தன், பாலமுருகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஜெயச்சந்திரனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு உடலை கீழ்பாவானி வாய்க்காலில் வீசிவிட்டு காரை கடத்தி சென்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரூ 90 ஆயிரத்திற்கு விற்று பணத்தை பங்கு போட்டு கொண்டனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
ஆனந்தன் தனராஜ் பாலமுருகன் என மூவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் விற்பனை செய்யப்பட்ட காரையும் மீட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *