October 2, 2026

Seithi Saral

Tamil News Channel

“ஜனநாயகத்தின் வில்லனாக முதல் அமைச்சர் விஜய் மாறி இருக்கிறார்” – மு.க.ஸ்டாலின் தாக்கு

1 min read

“Chief Minister Vijay has become the villain of democracy” – MK Stalin’s attack

2.10.2026
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இடைத்தேர்தலில் தவெகவிற்கு “தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி, மரண அடியாக இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சுறுசுறுப்பான ஊர் தாராபுரம். தஞ்சைக்கே நெல்லை வழங்கும் ஊர் தாராபுரம். ஜனநாயகத்தை சாகடித்துள்ளனர். வாக்களித்த உங்களுக்கு மதிப்பு தராமல் வேறுகட்சிக்கு சென்றதால் தேர்தல்.

இது திணிக்கப்பட்ட தேர்தல், உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை, நியாயம் கேட்டு வந்துள்ளேன். உங்களின் வரிப்பணத்தில் தேர்தல் நடக்கிறது. துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். விஸ்வாசமுள்ளவரை வெற்றி பெற வைக்க வேண்டி உங்களை நாடி வந்துள்ளேன். இருகரம் கூப்பி கேட்கிறேன்.

பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக இந்த இடைத்தேர்தல். இது எதனால் வந்தது? இதற்குக் காரணமானவர்கள் யார் என நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஆட்டம் காணக்கூடிய இந்த ஆளுங்கட்சிக்கு துணைபோகவும், விலைபோனதாலும் தான் இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது. வாக்களித்த உங்கள் மீது துளிகூட மதிப்பே இல்லாமல், தேர்தலில் வைக்கப்பட்ட விரல் மை அழிவதற்கு முன்னரே, வேறு கட்சிக்கு ஓடிப்போன அவர்களின் செயல்தான் காரணம்.
குதிரை பேரம் பேசி இந்த இடைத்தேர்தலை வர வைத்திருக்கின்றனர். ஒருத்தர் கிட்ட பெட்டிப் பெட்டியா பணத்தை திணிச்சதால, உங்கள் மேல் இந்த இடைத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை, பெட்டிபாமா, பல்டிபாமா என மக்கள் அழைக்கின்றனர்.

படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத் தேர்தலைஉருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இருக்கிறார்.

மக்கள் ஆதரவு இல்லாத முதல்-அமைச்சர். பெரும்பான்மைக்காக அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்குகிறார் இதுதான் மாற்றமா? இதுதான் ஜனநாயகமா? அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்குவதுதான் நிர்வாகமா?

பல இடங்களுக்கு சோபாக்களை அனுப்பினார். அதிமுகவினரை விலைக்கு வாங்கினார்.

அவர் (முதல்வர்) பேசுறதுலாம் இல்லை, கத்துறதுதான். சட்டமன்றமானாலும் சரி தெருவாக இருந்தாலும் சரி கத்துறதுதான். ஆனால் மீடியா மைக் பார்த்தா மட்டும் அலர்ஜி.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை; இப்படிப்பட்ட நிலை தொடர வேண்டுமா? இந்த ஆட்சியில் 4 மாதங்களில் நாறிப்போய்விட்டது; தவெகவுக்கு வாக்களித்த மக்களே புலம்புகின்றனர் பல ஊர்களில் ஆளுங்கட்சியினரை மக்கள் அனுமதிக்கவில்லை; இது முதல்-அமைச்சருக்கான எதிரான எதிர்ப்பு அதிகமாகி உள்ளது.

“தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்டேங்குறீங்க? என்ன சார் பயம்? பாஜக-னா அவ்ளோ பயமா சார்?

மக்களை ரோட்டில் போராடவிட்டு முதல்-அமைச்சர் பண்ணையார் போல் பட்டு வேட்டியில் பந்தா காட்டுகிறார். கண்ட கண்ட சைகை காட்டுகிறார். பாஜகவின் கிளைதான் தவெக என இதே தாராபுரத்தில் முதல்-அமைச்சர் விஜய்யே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தவெக ஒரு அரசியல் கட்சியே அல்ல; அது ஒரு கார்ப்பரேட் மாபியா. அதில் இன்வெஸ்டிங் பார்ட்னர், வொர்க்கிங் பார்டனர், ஸ்லீப்பிங் பார்டனர், சீக்ரெட் பார்ட்னர் என பெரிய கும்பலே இருக்கு. அந்த பார்ட்னர் எல்லாம் யார் என்று உங்களுக்கே தெரியும்; தமிழ்நாட்டை நாசமாக்க வேண்டும் என்பதுதான் அந்த கும்பலின் டார்கெட்.

ஆணவத்தின் உச்சத்தில் மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தும் முதல்-அனைச்சர் விஜய்க்கு தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி, பாடமாக மரண அடியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *