October 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மருத்துவ விளம்பரங்களில் ஏஐ வீடியோக்களை பயன்படுத்த டாக்டர்களுக்கு தடை

1 min read

Doctors banned from using AI videos in medical advertisements

9/10/2026
மருத்துவ விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நோயாளிகளைக் கவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நெறிமுறை வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், விளம்பர நிறுவனங்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் அல்லது இணையதளங்களுக்குப் பணம் கொடுத்து நோயாளிகளைப் பரிந்துரைக்கச் செய்யும் நடைமுறைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இணையதளங்களில் தேடல் முடிவுகளிலும் செயலிகளிலும் பணம் செலுத்தி தங்களது தரவரிசையை செயற்கையாக உயர்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் புகைப்படங்கள், சிகிச்சைக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட படங்கள், நோயாளிகளின் கருத்துகள் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதல்களை மீறும் மருத்துவர்களுக்கு அபராதம் மற்றும் மருத்துவப் பணியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் மருத்துவப் பதிவேட்டில் உள்ள பதிவை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை நீக்கவும் வழிகாட்டுதல்களில் வகை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *