October 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம்

1 min read

Voter enrollment camp in Tenkasi district

9.10.2026
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத மற்றும் இளம் மற்றும் முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று தென்காசி மாவட்ட தேர்தல்
அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல் படி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு பதிவு இயக்கம் 7.10.2026, 8.10.2026 மற்றும் 9.10.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் ஐநது சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் எதிர் வரும் 10.10.2026 (சனிக்கிழமை) முற்பகல் 10.00 மணி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத மற்றும் இளம் மற்றும் முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியான வாக்காளர்கள் படிவம் 6 பெற்று தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தேர்தல் கல்வியறிவு குழுக்கள் மூலமாகவும் இளம் மற்றும் முதல் முறை தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 6 நேரில் பெற்று வாக்காளர்களாக பதிவு செய்திட மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரருமான ரஞ்ஜீத் சிங். கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *