குற்றாலம் காவலருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டுச் சான்றிதழ்
1 min read
Nellai Range DIG awards certificate of appreciation to Courtallam police officer.
12.10.2026
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலருக்கு நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவத்தில், குற்றவாளி களைச் சம்பவ இடத்திலேயே உடனடியாகக் கைது செய்ய உதவி, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து சிறப்பாகச் செயல்பட்ட குற்றாலம் காவல்நிலைய இரண்டாம் நிலைக் காவலர்
க.செந்தில்குமாரைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு இன்று (12.10.2026) சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.