October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு

1 min read

Aadhaar mandatory to avail benefits under the ‘Annan Seer’ scheme – Tamil Nadu government announcement

19/10/2026
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் ஆதார் எண் வைத்திருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் குறித்தும் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படுகிறது. சமூக நல இயக்குநரகம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெண்கள், தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.ஆதார் எண் இல்லாத பெண்கள், இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.அருகில் ஆதார் பதிவு மையங்கள் இல்லாததால் பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் ஆதார் பதிவு முகாம்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பிறகும் எண் ஒதுக்கப்படாத நிலையில், மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக ஆதார் பதிவு அடையாளச் சீட்டு அல்லது கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம்பான் கார்டு,பாஸ்போர்ட்

, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,100 நாள் வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், அரசு அதிகாரி அல்லது வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை’ இவ்வாற்றில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம்.

கைரேகையின் தரம் குறைவாக இருப்பதால் ஆதார் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்த முறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாத சூழலில், ஆதார் கடிதத்தில் உள்ள க்யூஆர் குறியீட்டைச் சரிபார்த்து திட்டத்தின் பயன்களை வழங்கலாம். இதற்கான வசதிகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஏற்படுத்த வேண்டும்.மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்தால், மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *