October 19, 2026

Seithi Saral

Tamil News Channel

உலக ஸ்கேட்டிங்: பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

1 min read

World Skating Championship 2026: Chief Minister Vijay congratulates athletes from Tamil Nadu who won medals

19.10.2026
பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரில் பதக்கங்களை வென்று சாதனை படைத்திட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் 2026 தொடரின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமாருக்கும், ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!

இந்த போட்டிகளில் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருப்பதோடு, தற்போது மூன்றாவதாக தங்க பதக்கத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சாதனைகள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.

பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார், வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோர் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *