October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

நாமக்கல் கவிஞருக்கு அண்ணாமலை புகழாரம்

1 min read

Annamalai pays tribute to Namakkal Kavignar

19.10.2026
நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ்த் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை என்று அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர வேட்கையை தனது கவிதைகளால் மக்களிடம் விதைத்து, தேசப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டிய நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.

தமிழக அரசவை கவிஞராக போற்றப்பட்டதுடன், பத்மபூஷன் விருதும் பெற்று நாட்டின் பெருமைக்குரிய கவிஞராக திகழ்ந்த நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை.

இவ்வாறு அதில் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *