தென்காசி வீ த லீடர்ஸ் இயக்கம் சார்பில் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி
1 min read
Cleanup drive for the Chittaru River, organized by the ‘We the Leaders’ movement in Tenkasi
20.10.2026
தென்காசி மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான சிற்றாறு நதியைப் பாதுகாக்கவும், நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் தமிழக அரசு சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில்சிற்றாறு நதியைத் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தென்காசி யானைப்பாலம் படித்துறை பகுதியில் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி, படித்துறை பகுதியைச் சுத்தப்படுத்தினர்.தென்காசி நகரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் சிற்றாறு நதியில் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தென்காசி நகரின் கழிவுநீரை முறையாகச் சேகரித்து சுத்திகரிக்கும் வகையில், தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையம் அமைத்து நதியில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாகத் தடுப்பதே தங்களது முக்கிய நோக்கம் என வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.