October 23, 2026

Seithi Saral

Tamil News Channel

2027ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

1 min read

Announcement of public holidays for the year 2027

22.10.2026
2027ஆம் ஆண்டுக்கான 24 பொது விடுமுறை நாட்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

புதிய ஆண்டிற்கான திட்டமிடல்கள் மற்றும் பயணங்களை முன்கூட்டியே வகுத்துக் கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு அரசு 2027ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு தலைமைச் செயலாளர் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், பண்டிகைகள், தேசிய நாட்கள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறை தினங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கும் பொது விடுமுறை நாட்கள் பொருந்தும். மேலும் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாகும்.

*2027 பொது விடுமுறை பட்டியல்:*

01.01.2027 வெள்ளி - ஆங்கில புத்தாண்டு; 15.01.2027 வெள்ளி - பொங்கல்; 16.01.2027 சனி - திருவள்ளுவர் நாள்; 17.01.2027 ஞாயிறு - உழவர் திருநாள்; 22.01.2027 வெள்ளி - தைப்பூசம்

26.01.2027 செவ்வாய் - குடியரசு நாள்; 10.03.2027 புதன் - ரம்ஜான்; 26.03.2027 வெள்ளி - புனித வெள்ளி

01.04.2027 வியாழன் - வங்கி கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும்); 07.04.2027 புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு;

14.04.2027 புதன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்; 19.04.2027 திங்கள் - மகாவீர் ஜெயந்தி; 01.05.2027 சனி - மே நாள்; 17.05.2027 திங்கள் - பக்ரீத்; 15.06.2027 செவ்வாய் - மொகரம்

15.08.2027 ஞாயிறு - சுதந்திர நாள்; 25.08.2027 புதன் - கிருஷ்ண ஜெயந்தி; 04.09.2027 சனி - விநாயகர் சதுர்த்தி; 02.10.2027 சனி - காந்தி ஜெயந்தி; 08.10.2027 வெள்ளி - ஆயுத பூஜை; 09.10.2027 சனி - விஜயதசமி; 28.10.2027 வியாழன் - தீபாவளி; 25.12.2027 சனி - கிறிஸ்துமஸ்

பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தங்களது விடுமுறை காலப் பயணங்களையும் விழாக் கொண்டாட்டங்களையும் முன்கூட்டியே திட்டமிட இந்த அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2027ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *