திரையரங்கம் சேவை குறைபாடு ரூ.17,000 அபராதம்.
1 min read
Deficiency in service at a cinema theatre: Rs. 17,000 fine
22.10.2026
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், காவல்கிணறு ராஜாஸ் சிட்டியில் இயங்கி வரும் சக்ரவர்த்தி சினிமாஸ் திரையரங்கில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு தொடர்பாக சரவணன் என்பவர் தாக்கல் செய்த நுகர்வோர் புகார் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் 17.01.2026 அன்று திரைப்படம் பார்ப்பதற்காக ரூ.538.50 செலுத்தி கோல்டு கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், திரையரங்கில் இருக்கைகள் சேதமடைந்து காணப்பட்டதுடன், கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகவும், திரைக்காட்சி தெளிவாகத் தெரியவில்லை என்றும், குளிர்சாதன வசதி செயல்படாததால் அதிக வெப்பம் நிலவியதாகவும் புகார் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 22.10.2026 அன்று பிறப்பித்த உத்தரவில், எதிர்த்தரப்பினர் மனுதாரருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவாக ரூ.7,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தத் தொகையை உத்தரவு நகல் பெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால், மேற்கண்ட தொகைகளுக்கு ஆண்டுக்கு 9% வட்டி செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எம். தனசேகரன், கே. மணிகண்டன் மற்றும் கே. மகேஷ் ஆஜரானார்கள்.