தென்காசியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம்
1 min read
Anti-drug awareness walk in Tenkasi
22.10.2026
தென்காசியில் இன்று காலை நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் கைப்பேசி திரை பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு நடைபயணத்தினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் பிரபஞ்சம் சி.எஸ்.ஆர். டிரஸ்ட் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் கைப்பேசி திரை பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று (வியாழன்) காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் .
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பிரபஞ்சம் சி.எஸ்.ஆர். டிரஸ்ட் தலைவர் பிரகாஷ், திட்டங்கள் மற்றும் செயலாக்கம் தொடர்பான பொறுப்பு அதிகாரி சமீர்கான், டிரஸ்ட் நிர்வாகிகள் முத்துராஜ் பெரியசாமி, ஜெயேந்திரன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பது, கைப்பேசி பயன்பாட்டை முறையாகக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.