October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

குலசை கோவில் அருகே வாலிபர் கொலையில் தந்தை, 2 மகன்கள் கைது

1 min read

Father and his 2 sons arrested for the murder of a young man near Kulasei temple

22.10.2026
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள கடற்கரை பூங்கா பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக குலசை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் இறந்து கிடந்தவர் உடன்குடி வில்லி குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் வேல்முருகன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரது உடலுக்கு அருகில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அது தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் காளிராஜ்(40) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

உடனடியாக காளிராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. நேற்று முன்தினம் இரவு காளிராஜ் மற்றும் அவரது மகன்களான முத்துவிஜய்(18), இசக்கிராஜா(18) ஆகிய 3 பேரும் குலசை கோவிலுக்குச் சென்றபோது, அங்கு வேல்முருகன் அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மகன்கள் 3 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தை மற்றும் மகன்கள் சம்பவ இடத்திலிருந்து தூத்துக்குடிக்கு தப்பி வந்த பின்னர்தான், தங்களது செல்போன் அங்கு மாயமாகி இருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், காளிராஜ் மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குலசை தசரா திருவிழா மற்றும் விரத நிறைவுப் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்களில் தானாகவே பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பம்: 2030-ல் கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய தொழில் நுட்பம், காரின் முன்னால் உள்ள வாகனங்கள் அல்லது தடைகளைக் கண்டறிந்து, மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கும். ஓட்டுநர் உரிய நேரத்தில் செயல்படாவிட்டால், கார் தானாகவே பிரேக்கைப் பயன்படுத்தி விபத்தைத் தவிர்க்கவோ அல்லது அதன் பாதிப்பைக் குறைக்கவோ உதவும். 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய கார் மாடல்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். அதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் கார் மாடல்களுக்கு 2032-ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த வசதி கட்டாயமாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

கார்களில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டாக்சிகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.தானியங்கி ஸ்டீயரிங் கட்டுப்பாடு, அவசரகால பாதை மாறுதலைத் தடுக்கும் அமைப்பு, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் மற்றும் கவனக்குறைவைக் கண்டறிந்து எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை டாக்சிகளுக்குக் கட்டாயமாக்கப்படலாம்.

லாரி மற்றும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளன. தானியங்கி அவசரகால பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் பகுதிளில் இருப்பதையும் ஓட்டுநர்கள் கண்டறியும் வசதி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறியும் அமைப்பு மற்றும் பாதை மாறும்போது எச்சரிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் சோர்வைக் குறைப்பதுடன், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *