October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்- ஆட்சியர் தகவல்

1 min read

Home gardens for homemakers in Tenkasi district – information from the Collector.

22.10.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் 2026-2027 வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளில் வீட்டுத் தோட்டங்களில் இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நச்சு தன்மையற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நோக்கில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்தின் கீழ் மாடி தோட்டத் தளைகள் விநியோகம், மாடித் தோட்டங்களில் நிழல்வலைக்குடில் அமைத்தல், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்பு வழங்குதல் போன்ற இனங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

தென்னை நார்க் கழிவுடன் கூடிய செடி வளர்ப்பு பைகள் 6 எண்கள், மண்புழு உரம்-2 கிலோ, 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம்-400 கிராம், பாஸ்போ பாக்டீரியா-400 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி -300 கிராம், வேப்பெண்ணெய்-100 மில்லி மற்றும் செடிகள் வளர்ப்பு கையேடு அடங்கிய மாடித்தோட்டத் தளைகள் 50% மானியத்தில் வழங்கப்படஉள்ளது.

தமிழ்நாடு தளிர்க்கீரைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தளிர்க்கீரை விதைகள். வளர்ப்புத் தட்டு. தென்னை நார்க் கழிவு, நீர் தெளிப்பு கருவி, வழிமுறைக் கையேடு அடங்கிய தொகுப்பு 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

மேலும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி ஊக்குவிப்பு, தென்னையில் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை, தென்னையில் உற்பத்தி திறனை அதிகரிக்க தென்னை டானிக் வழங்குதல் போன்ற இனங்கள் செயல்படுத்தப் படஉள்ளது.

பனை பாதுகாப்பு இயக்கம் 2026-2027 திட்டத்தின் கீழ் பனை விதைகள் விநியோகம், பனங்கன்றுகள் விநியோகம், பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல் போன்றவை மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *